Pages

Ganesh

Ganesh

Thursday, February 25, 2010

இசை தேடும் கவிதை


உருகி உருகி வழிந்து

மீண்டும் இருகிப்போகிறேன்...

வானவில்லாய் வளைந்து தேடி

கலைந்துபோகிறேன்...

அழிந்துபோகும்... தெரிந்தும்

கரையில் எழுதிவைக்கிறேன்..

கனவே... உனைக்கானவே

தினம் நான் கனவு காண்கிறேன்....

(உருகி உருகி வழிந்து....)


தேகம் உன்னால் எரியும்

நான் விறகாய் சாகிறேன்...

நீ களவுகொண்டு போக

வெறும் கூடாய் நோகிறேன்...

வெயில் கொதிக்கும்போதும்

நான் பனியில் உறைகிறேன்..

என் தனிமை தவிக்கும் நேரம்

மழையில் கனலாய் வெடிக்கிறேன்…

உயிரை தீண்டி.... உணர்வை கொழுத்தி

ஒழிந்துகொள்கிறாய்..

நான் உடைவேன் என்று தெரிந்தும்

விழியால் மோதிச்செல்கிறாய்...

வரமாய் ஒரு சொல் தருவாய்

நான் வேண்டிநிற்கிறேன்....

சாபமேனும் தந்துசெல்லேன்

என் உயிர் பிழைத்திடுவேன்...

(உருகி உருகி வழிந்து...)


நினைவுச்சுவற்றில் உன் பெயர்

மட்டும் எழுதி வைக்கிறேன்...

உன் சிரிப்பின் இசைக்கு

வரிகள்கோர்த்து பாடிப்பார்க்கிறேன்...

நீபோகும் சாலையில்

நானும் நடந்து சிலிர்த்துப்போகிறேன்..

உன்னை கடக்கும் நொடியில்

நூறுமுறை தினம் செத்துப்பிழைக்கிறேன்...

நரம்பில்புகுந்து... சுயத்தைபிழிந்து...

என்னில் கலகம் செய்கிறாய்...

அடிமை சாசனம் எழுதித்தந்தும்

வம்பாய்... போர்தொடுக்கின்றாய்...

என் காதல் ஒருநாள் உணர்வாய்

என்றே காத்திருக்கின்றேன்...

இல்லை... என்கல்லறைமீதெனிலும்

கண்ணீர்விடு.. நான் மோட்சமடைந்திடுவேன்….

(உருகி உருகி வழிந்து....)

No comments:

Post a Comment