Pages

Ganesh

Ganesh

Wednesday, April 7, 2010

ஈரம்


வெளியே மழையாலும்...
உள்ளே நட்பாலும்....
நனைந்து கொண்டிருக்கின்றது...
குடை...!!

எனக்காய் ஒரு வானவில்


சோ..வென்ற மழை....
என்னைமட்டும் வளைத்து வானவில்....
கடல் முத்தமிட குனிந்து விட்ட மலைஉச்சி...
தனிமையில் நான்...
கடிகாரத்தின் கால்களை கட்டிபோட்டுவிட்டு
இருகைகள் விரித்தபடியாய் உயிர்வரை நனைகிறேன்...
சட்டென்று இமைகள்திறக்க சுயம்விழித்தேன்...
அட... கனவு....
உடல் ஈரமில்லை... ஆனாலும் நனைந்துவிட்டிருக்கிறேன்...

Monday, April 5, 2010

என்னிலிருந்து காப்பாற்று...


நன்றி சொல்ல ஆசை...
ஆனாலும் பயமும் உண்டு....
சொல்லும் நன்றி
உதவிக்கு கைமாறாகிடுமோ...
இல்லை... நன்றியுடன்... செய்உதவி
காலாவதி ஆகிடுமோ...

என் செய்வான் இவன்...
கேவலம்... மனிதப்பிறவி ஆனானே..
உதவிசெய்தோன் உதவிசெய்யா தருணம்தோன்றில்
செய்நன்றி மறந்துபோவேன்
மீண்டும் அவனை திட்டித்தீர்ப்பேன்...
அன்றுசெய்த உதவிக்கோர்
நன்றிசொல்லி ஈடுசெய்யதேன் என
தன்னிலைக்கோர் ஞாயம் சொல்வேன்
சுயம் தின்று சுயமழிவேன்...

அவனும் அப்படித்தான் என
ஒற்றைவிரல் நீட்டி
சுட்டிட எத்தனித்தேன்
மறுவிரல்கள் மூன்றுமாய் எனைநோக்க
உச்சியில் நச்சென்றே குட்டுண்டேன்...

நான் சொல்லி மறந்ததும்...
சொல்லாமல் மறந்ததுமாய்
நன்றிகள் ஏறாலம்....
இனியேனும்... சொற்களுக்குள் புதைக்காது...
நன்றியை உணர்வோடு கலக்குமென்னம்விடுத்து
மீண்டும் முருங்கையேறிவிடக்கூடாது
என் மனமெனும் வேதாளம்...

ஆதலால்தான் இறைவா...
தாழிட்டு உன்முன்னே
விழிகசிய வேண்டுகின்றேன்...
என்னை... என்னிலிருந்து காப்பாற்று...
நான் நன்றி மறந்தால்... அச்சனமே
எனை மறிக்கச்செய்து பிணமாக்கு...