Pages

Ganesh

Ganesh

Thursday, February 11, 2010

நிர்வாணம்

கருத்துப்போன பகலுடன்
காத்துக்கிடக்கின்றேன் ...
கீழ்வானம் என் விழிகள்போன்றே
சிவந்துகிடக்க.. வானம்
எனக்குபதிலாய் கண்ணீர் சிந்தியபடி...
காற்று வெப்பமாகவே இருக்கின்றது...
நான் மட்டும் உணர்கிறேனா...
எண்ணப்பலகையில் நீ கிறுக்கிச்சென்ற
கிறுக்கல்கள்மட்டுமே அழியாது இருக்க...
யாரோ இரு உயிர்ப்பிண்டங்கள்
உளரிக்கொண்டு செல்கின்றன
இவன் பைத்தியம்...
பேசமறந்ததால் மொழி மறுத்தேனா...
இல்லை… மொழிமறந்துபோய் பேசமறுத்தேனா...
தெரியவில்லை.... ஆனாலும்...
பேச எதுவுமில்லை என்னிடம்...
எங்கோ இருந்து பறந்துவந்து
என்னில் மோதிச்சென்ற ஓர் சருகு
காதில் ஏதோ சொல்லிச்சென்றது...
எனக்குத்தெரியும்...
என் உயிர் முடிச்சு உன்
எண்ணக்கயிற்றில்தான் முடியுண்டு கிடக்கின்றது... நீ
விட்டுச்சென்ற உன்... சுவாசக்காற்றில்தான்
இந்த உடல் உருக்குலைந்தும் உயிர்வாழ்கிறது...
அடுத்த நிமிடமே என்பிடிமானமெல்லாம்
என்பிடிவிட்டுப்போகலாம்... அக்கணமே
என்விரல்கள் உன் விரல்களுடன் கைகோர்க்கும்...
அதுவரை... நான்...
கருத்துப்போன பகலுடனேயே காத்துக்கிடக்கின்றேன்...
உன்னைத்தொலைத்து நிர்வாணமாய்…!!!

No comments:

Post a Comment