
கடுந்தவம் செய்ததின் பலனாய்
முனிவன்முன் தோன்றினான்
வரம் தர இறைவன்....!
வேண்டியதை கேள் வரமாய்
இக்கணமே தருவேன் என்றான்...!
தவத்தின் சொந்தக்காரன்
வரமென சாபம் கேட்டான்...!
நான் நினைத்தபடி...
என் விருப்பின்படி....
உலகை மாற்றிடவேண்டும்..
இவ்வரமே என்தேவை...!
திடுக்கிட்டுப்போனான் படைப்பின் மூலவன்..!.
எத்தனை சொல்லியும்
இறங்கவில்லை ...!
கேட்டது வேண்டும் என
தவம் கலைந்தபின்பும்
ஒற்றைக்காலில் நின்றான் முனி..!.
வழிஇன்றி சாபத்தை..
இல்லை... இல்லை...
வரத்தை கொடுத்தே விட்டான்
அனைத்துமறிந்தவன்..!
ஆறு முழு நிலவுகள் அவன்
வாழ்நாளில் கடக்கும் முன்னே... ஒருநாளில்
தனக்கான மரணத்தையும் தன்
விருப்பின்படியேற்று
தற்கொலையில் உயிர் முடித்தான்….
வரம்பெற்ற முனிவன்...!
மேலுலகம்....
இறைவன் வந்தான்…!
முனிவனை ஏறிட்டான்….!
நமட்டுச்சிரிப்புடனே கேட்டுக்கொண்டான்…!
உலகையே தன்னிச்சைபோல்
இயற்றிக்கொண்ட மாமுனிவன்
இடமில்லை அங்கென
இங்குவந்தனையோ...!
உடல்தொலைத்த அக்கணமே
அகங்காரமும் தொலைந்துபோக
மண்டியிட்டான் முனிவன்... !
இரட்ச்சிப்பாய் இறைவா..
வாழ்வின் சூட்சுமம் புரிந்துகொண்டேன்..
நாளையின் புதிரோடு…
தோல்வியில் தடக்கி …
வெற்றியில் எழுந்து…
அழுகையையும்.. சிரிப்பினையும்..
அங்கங்கே பகிர்ந்து..
வாழ்க்கையின் மணித்தியாளங்களை
அணுபவமாய் பயின்று..
கோபத்தையும் அன்பினையும்
உண்மையாய் நுகர்ந்து…
இயற்கையின் ஆச்சரியங்களில்
அதன் இயல்பிலேயே கலந்து..
மொத்தத்தில்..
கடவுளாய் நீயும்….
மனிதனாகவே நானும்...
இல்லாத உலகம்..
உப்பற்ற பண்டம்தானே..
எல்லாமிருந்தும் இல்லாத வாழ்வில்
வெறுத்துப்போனேன்..
அஃதே நான் இன்று உலகம்துறந்தேன்..
மரணம் கொண்டேன்...!!!!

No comments:
Post a Comment