Pages

Ganesh

Ganesh

Thursday, February 11, 2010

நனைந்தவன்.....

ஒருமுறையேனும் வரமாட்டாயா.....
மனம் ஏங்கிக்கொள்ளும் உன் வரவுக்காய்....!
காக்கவைத்தே பழக்கமுனக்கு
வருவதில்லை நீ ….
நான் ஏமாந்து போனதே அதிகம்.... !
நீ வருவாய்….
நான் அலுத்துக்கொள்வேன்….!
ஐயோ.. ஒரே தொல்லை…
அலுவலகம் செல்ல...
நண்பர்களுடன் கும்மாளமிட…
கடற்கரை அழகு ரசிக்க...
நினைத்த இடம் சென்றுவர...
ஒரு ஐஸ்கிரீம் சுவைக்க…
இது எதுவும்முடிவதில்லை உன்னால் எனக்கு...! எப்பொழுதுதான்போவாயோ…
சீச்சீ... என்றாலும் விடுவதாயில்லை நீ...!
ஒன்று தெரியுமா உனக்கு
சித்திரை மாதத்தில் நீ வரும் ஒருநாளும்...
மார்கழியில் நீ இல்லா அந்நாளும் ….
அழகு….
மழையே………!!!!!

No comments:

Post a Comment