பெற்றமண்.. மாற்றானால்
களங்கப்பட்டு.. அபகரிக்கபட
எமக்குள்மட்டும் வீராவேசம் பேசி
வெளியில் மெளணிகளாய் இருதோமே..
நாமெல்லாம் சபிக்கப்பட்டவர்கள்..!
துரோகிகளெள்ளாம்.. துரோகிகள்தாமென
எக்காளமட்டுச் சொலியும்..
நேரில் கண்டால்.. சந்தனப்பொட்டிட்டு..
மலர் மாலை சூடி.. போலியாகவேனும்
சிரித்தபடியே வரவேற்று..
சகதியில் புதைய சம்மதிக்கின்றோமே..
நாமெல்லாம்தான் சபிக்கப்பட்டவர்கள்..!
என் இரத்தத்தின் இரத்தங்களேயென..
அடிக்குரலில் கபடமாய் பேசுபவனையே..
தலைவா..தலைவா..என தலைமேல்தூகியபடியே..
தன்னிலை உணர்வற்ற தொப்புள்கொடி உறவுகளை..
பலமென்று எண்ணி.. நொந்தோமே...
நாமெல்லாம் சபிக்கப்பட்டவர்கள்..!
குந்த ஒரு குடிநலம் கேட்டது
குற்றமென கண்டதனால்..
குரூரமாய் குதறப்பட்டு..
குருதி தோய்ந்து.. உருக்குலைந்து..
குற்றுயிராய் கிடக்கின்றோமே..
நாமெல்லாம்தான் சபிக்கப்பட்டவர்கள்..!
அருகேதான் விடிவெள்ளியென..
நம்பிக்கையுடன் ஓடியவர்களின்..
கால்களெள்ளாம் வெட்டப்பட..
கதியற்று.. கதறுகின்றோமே..
நாமெல்லாம் சபிக்கப்பட்டவர்கள்..!
உலகே….. இன்று..
சபிக்கப்பட்டவர்கள்.. சபிக்கின்றோம்..
நாம் அணு அணுவாய் அறுக்கப்பட
கத்திகொடுத்து.. கைதட்டி நின்றவரே..!
கைகட்டி வேடிக்கை பார்த்தவரே..!
கணகள்மூடி.. உறக்கம்போல் நடித்தவரே..!
உண்மையாய்தானடா சொல்கின்றோம்..
ஒருநாள்..
நாம் சிரிக்கப்போவதும்..
நீங்கள் அழப்போவதும்...
எம் புதைந்துபோன
தலைமுறைமீது.. சத்தியமாக உறுதி!
Ganesh
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment