Pages

Ganesh

Ganesh

Thursday, February 11, 2010

அம்மா...

வரம் ஒன்று தா இறைவா..!
கருவறை முதல் என் கல்லறைவரை
தாயவள் நிழல் வேண்டும் எனக்கு..
என்னாயுள் நீள வேண்டாம்
அவளாயுள்வரை தந்தாள்போதும்..

அம்மா...
என் அன்பை சொல்ல
பலநூறு வார்த்தை தேடித்தோற்றேன்..
அம்மா என்றழைப்பதைவிடவும்
அழகாய் எதுவும் தோன்றவில்லை....!!!


என் பிறந்தநாள் கொண்டாட
இஷ்டமில்லை எனக்கு..
அம்மா....
உனக்கு நான்
வலி தந்த நாளன்றோ அது....!!!!


ஜனனம்முதல் வரவாகும்
உறவுகளின் எண்ணிக்கை…!
மறந்தும்… பிறிந்தும்...
இடைநடுவே தொலைந்தும்...
நிறங்களை மாற்றியும்…
நினைவுகளில் சுமைதந்தும்…
முதல் தினம்போல் இருப்பதில்லை…
அந்திமத்தில் உறவுகளின் உறவு...!

ஆனாலும்... அம்மா...
விதிவலக்காய் உன் அன்பு…
நான் கரு உதிர்ந்த நாள் முதலாய்…
கண்மூடும் நாள்வரையில்….
மாற்றம் இன்றி தொடர்ந்திருக்கும்...!
வரமொன்று தருவான் இறைவன் எனில்....
ஒன்றை மட்டும் வேண்டிநிற்பேன் உண்மையாய்...
நான் கண்திறந்த அன்னைமடியே
நான் கண் மூடும் இடமாய் செய்...!!!!!

No comments:

Post a Comment