முடிந்து போயிற்று...
காதை கிழித்த பிரச்சார பீரங்கிகள் சத்தம்...
சாலைமூடிய தொண்டர் மந்தைகள் கூட்டம்...
ஊரை குப்பைகளாக்கிய புழுகுத்தாள்களின் கஞ்சல்...
பொய்மையை வாய்மையாய்கொண்ட
தொ(ல்)லை காட்சிகளின் ஓலங்கள்...
இன்றுடன் சற்றே ஓய்ந்துபோயிற்று...
தலைசிறந்த…
பொய்யர்களிற்கான...
கள்ளர்களிற்கான...
நாசக்காரர்களிற்கான...
கொலைகாரர்களிற்கான...
ஈனப்பிறவிகளிற்கான...
தேர்ந்தெடுப்பு முடிந்துபோயிற்று....
பத்தம்ச... பதினைந்தம்ச.. வாக்குறுதிகள்
காற்றோடு பறந்துபோவது... அதோ தெரிகின்றது...
எமக்கான ஆப்பை... நாங்களே வைத்தாயிற்று...
முகத்தில் பூசப்போகும் கரிக்கு... முதல்படியாய்
விரல்நுனியில் கறு மை படிந்தாயிற்று...
ஜனநாயக தேர்தலெனும் கேலிக்கூத்தில்
நாங்களும் பங்கிற்கு நடித்தாயிற்று...
இனி... உலகத்தின் முதல்நாடாய் இந்நாடும்..
உலகத்தின் உயர் குடியாய் இம்மக்களும்..
சுதந்திரத்தின் குடியிடமாய் இம்மண்ணும்...
மாறிவிடும்... நம்புகின்றோம்..
ஏனென்றால் நாமெல்ல்லாம் மடையர்தானே...
வேட்டிதருவதாய் சொன்னார்கள்...
எமக்கு தெரியும்... கட்டியிருக்கும் கோவணமும்
இனி...கண்முன்னே களவாடப்படுமென்று...
பிணத்தின் நகையையும் களவாடும் எங்கள்
ஜனநாயகம் பேசும் அரசியல் பதர்களே..
திருந்தாத கூட்டங்கள் நீங்களெனினும்
போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போகிறேன்...
போங்கடா நீங்களும் உங்கட அரசியலும்…!!!!
Ganesh
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment