எத்தனை ஆயிரம் வலிகள் சுமந்தோம்..
உறவுகள் சிதைய உருக்குலைந்தோம்..!
கனவுகளெல்லாம் கானலாய்ப்போக..
கண்ணீர் விடவும்.. அருகதையற்றோம்..!
ஆண்டசாதி அகதியாய்போக..
அயல்வீடு தேடி.. யாசகரானோம்..!
முல்லைகளெள்ளாம் முடமாய்ப்போக..
முட்கம்பி வேலிக்குள்..மிருகங்களானோம்..!
கடவுள்கள் எத்தனையோ எமக்கிருந்தும்..
கடைசியில் கருவறையிலேயே கரியாய்போனோம்..!
கல்லிலிருந்த தெய்வங்களெல்லாம்..
வெறும் கல்லாய் இருக்கவே நாம் கதியற்றுப்போனோம்..!
குறைகள் இல்லை எமக்கென்ற
அறிக்கைகள்கண்டு சிரித்துக்கொண்டோம்..
இழப்பதற்கென்று இனி
எதுவுமில்லையென்றானபின்பு..
குறைகளெங்கே எமக்கிருக்கும்..!
கண்விழிகளெல்லாம் களவாடபட்டபின்பு
கனவுகளெங்கே கருத்தறிக்கும்..!
இன்றுதான் நாமெல்லாம் சிரிப்பதாக
பத்திரிகை புகைபடங்கள் சேதிசொல்லும்..
நெஞ்சினிலே கனல்கின்ற பெருந்தீயை..
எந்த படகருவி காட்டிநிற்கும்..!
இத்தனையானபின்பும் நம்பிக்கைகொண்டு...
உலகுக்கோர் தலைநமிர்த்தி உண்மைசொல்வோம்......!
ஈழத்தமிழர் நாம் பீனிக்ஷ் பறவையினம்...
எம் உறவுகள் சாம்பலில் இருந்து எழுந்துவந்தோம்..
மீண்டும்.. அந்த சூரியன் நோக்கியே பயணிப்போம்.....!!!
Ganesh
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment