Pages

Ganesh

Ganesh

Thursday, February 11, 2010

பொருத்தமற்றவன்….

என்னை மன்னித்துவிடு..
நீ சொல்வது உண்மைதான்..
எனக்கு உனக்காய்
கவிதை சொல்லத்தெரியாது..
உன்னை தூங்கவைக்கும்
இசை அறிவும்கிடையாது..
நீ தூக்கிபோடும் எச்சங்களை
சேகரிக்கும் ஆசைகிடையாது..
உன் அசைவுகளை வர்ணிக்கும்
கலைஞானமும்கிடையாது..
என் கடிகார முட்கள் இரண்டும்
உன்னைசுற்றியே ஒடுவதாய்
பொய்சொல்லத்தெரியாது...
என் உடற்செல்கள் ஒவ்வொன்றும்
உன்பெயரையே பச்சைகுத்திக்கொண்டதாய்
பிதற்றவும் தெரியாது...
காதலர் தினத்தன்று
பூங்கொத்துடன் உன்முன்வந்து
உன்னை அசறவைக்கத்தெரியாது...
உன் இரவுகளின் பாதிநேரத்தை
கைப்பேசியின்வழி அபகரிக்கும்
சுவாரசியமும் தெரியாது...
ஆகமொத்தத்தில்
நீ விரும்பும் காதலனாய் நானில்லை…. கண்டுகொண்டேன்…
மன்னித்துவிடு என்னை..
வேசம் போடத்தெரியாதவன் நான்..
காதலை கூவிவிற்கும்
வியாபாரியும் இல்லை நான்…
இன்றுபோலவே என்றுமிருக்கும்
உண்மை காதலன் இவனென்பதால்...
ஒத்துக்கொள்வேன் வெட்கமின்றி...
ஏமாற்றும் தகுதிகள் குறைந்தவன்……….- நீ
காதலிக்கப்பொருத்தமற்றவன்தானடி…..!!!

No comments:

Post a Comment