Pages

Ganesh

Ganesh

Thursday, February 11, 2010

நாங்கள் காதலித்தோம்...


நாங்கள் காதலித்தோம்...
பள்ளிக்கூடம்... அவள் வகுப்பறை...
கடந்து போவதென்றால்.. இருதயம்
மரதன் ஓடியவனாய் அடித்துக்கொள்ளும்...
எதிர்மாடி வகுப்பறை ஜன்னல்..
அவள் அறியாமல் பார்ப்பதில்
என்ன சுகம் இருந்ததென்று இன்று ஞாபகமில்லை...

நாங்கள் காதலித்தோம்...
இரண்டு சைக்கிளில் நாலுபேராய்
அவளை முந்திச்சென்று.. வித்தைகாட்டி...
ஒன்றாய்மோதி... தெருவில்விழ...
நண்பனின் காற்சட்டை சிப் போடமறந்ததை
அவளின் கேலிச்சிரிப்பால் கண்டு வெட்கிப்போனது
இப்போது நினைக்கையில் சங்கடம்மில்லை....

நாங்கள் காதலித்தோம்...
கோயில் திருவிழா...
அவளை கண்டதும் காதல்வர...
கடைக்கண்பார்வை கிட்டவேண்டி
செய்த பிரயத்தனமெல்லாம் வீணாய்ப்போக...
உற்சவத்தின் இறுதிநாளில்...
உச்ச முயற்சியாய்….
புகைப்படத்தில் அவளை வீழ்தும் சாகசம்
சறுக்கிக்கொண்டதும்...அவள்
சித்தப்பனிடம் நாங்கள் மாட்டிக்கொண்டதும்....
நினைவிலிருந்து முற்றாய் அழிக்கமுடியில்லை...


நாங்கள் காதலித்தோம்...
நண்பன் சொன்னான் காதலிப்பதாய்...
அடுத்தகணமே.. அவள்வீட்டு
தொலைபேசியை அலரச்செய்து
அவள் தாயுடன் அவனை பேசச்செய்து...
மீசை எட்டிப்பார்க்கும் வயதில்
விபரீதம் உணராது.... அவள்
வீடு சென்றோம்... பெண்கேட்க...
அங்கே... நடந்தவை ஒவ்வொன்றும்
இன்றுவரை ஞாபகப்பக்கங்களில் பதிந்து…
நாம் ஒன்றுகூடும் வேளைகளில்… வெடிச்சிரிப்புடன்
தவறாமல் மீட்டப்பட மறப்பதில்லை….

இப்படியாய்த்தான் நாங்களும் காதலித்தோம்...
இங்கே தவறுகள்... சரிகள் என்ற
எல்லைக்கோடுகள் இருப்பதில்லை...
விடலைப்பருவ காதலுக்கு அகராதியில்
இவ்விதமே பொருள் இருக்கும்...

இன்று... சந்தர்ப்பங்கள்... சூல்நிலைகள்...
எங்களிடையே தேச எல்லைகளை கீறிவிட
இந்த சின்ன.. சின்ன.. சேட்டைகளால்
நாங்கள் அவ்வப்போது தோளில் தட்டி
சிரித்து… சிலிர்த்துக்கொள்கிறோம்....
அது உங்களுக்குத்தெரிவதில்லை...
எங்களிற்கு மட்டுமே தெரிகின்றது....

No comments:

Post a Comment