என் பசிமுகம் காணாதே...
மடி தூங்கு...
நம்மை பசி தின்னும்... தின்றாலும்...
நீ தூங்கு...
வயிறு பசிபற்றி எரிகையிலே
கண்ணயறாதென
அறிந்தாலும்...
கண்ணே உன் முகம்காணும் திடமற்றேன்...
இந்த அக்கையின் மடிசாய்ந்து
நீ தூங்கு....
வளையல்கள்
கேட்கவில்லை...
வண்ண ஆடைகேட்கவில்லை...
பொம்மைகள்
தேவையில்லை...
பொய்பரிவும்
தேவையில்லை...
தேவையெல்லாம்..
மீட்ச்சி....
இந்த பசிச்சிறை உடைத்தெறிந்து...
தெருவோர
வாழ்வினின்று...
குழந்தைகள்
நாம் குழந்தைகளாகும்...
மீட்ச்சி
தானே…நம் தேவையெல்லாம்...
அதுவரை
…நீ மடிதூங்கு…
என் பசிமுகம் காணாதே...
மடி தூங்கு...
நம்மை பசி தின்னும்... தின்றாலும்...
நீ தூங்கு...

