Pages

Ganesh

Ganesh

Thursday, February 11, 2010

மீண்டும் உன்னைதேடி..


கண்களின் இடுக்கினில்
கற்துகள் உறுத்தியபோதும்...
கனவுகாண கற்றுத்தந்தவள்..நீ..
விரல்கள் உடைந்து
ஊனமாய் போனபின்பும்
கவிதை எழுதும் விந்தைசெய்தவள்..நீ..
நாவிழந்து.. வார்த்தை
செத்துப்போனபின்பும்..
பாடல் பாட சொல்லித்தந்தவள்..நீ..
கந்தகத்துகள்களால் அடைபட்டுப்போன
நாசித்துவாரம் வழி..
சுகந்தமுணரும் உணர்வுதந்தவள்..நீ..
மொத்தத்தில் நான்
நடைபிணமாய கிடந்தேனே..
உயிர்தந்து.. உயிர்ப்பித்தவள்..நீதானே...
பெண்ணே.. உன் வழிச்சுவடே
என் வாழ்கைபாதையென..
உன் அடியொற்ற நினைக்கையிலே..
வானவில் வந்து சென்ற வானமதாய்
வெறுமை தந்து சென்றாய் ஏனோ..
உயிரே.. நீயாகிப்போன என்னை
எங்கும் தேடி தோற்றதனால்..
வேண்டிக்கொண்டேன் இன்று..
மீண்டும் என் கண்களின் இடுக்கினில்
கற்துகள்கள் உறுத்தட்டும்.............!!!!

No comments:

Post a Comment