Pages

Ganesh

Ganesh

Thursday, February 11, 2010

காதலாகிக் கசிந்து…


இதயம் திறந்து வை..
கனவுகளுடன்
காதலும் உள்ளே வரட்டும்...
அது...
கனக்கின்ற மனதிற்கு இறக்கைதந்து…
பனித்துளிக்குள் சிறிதாய்… அழகாய் வீடுதந்து...
மகரந்த தாள்களில் உனக்காய்… புதிதாய் படுக்கை செய்து...
உயிர்க்கூட்டில் பட்டாம்பூச்சிகள் பறக்கச்செய்து…
நினைவுகளின் குப்பையெல்லாம் சுத்தம் செய்து...
இதலெல்லாம் புன்னகைக்குள் ஊறவைத்து...
தனிமையிலும் தனிமைக்கு விடுப்பு தந்து…
வானுக்கும் உனக்குமாய் பாதை நெய்து...
பகலிலும் நிலவோடு உறவுதந்து…
மூச்சுக்காற்றில் குளிர்தூவி சிலிர்க்கவைத்து...
நொடிதோறும் மென்சாரலில் நனையவைத்து…
ஒற்றைச்சொல்லில் கவிதை சொல்ல கற்றுத்தந்து…
தினமும் புதிதாய் உன்னை பிறக்கவைத்து...
அடடா...... சொல்லித்தெரியாது காதல்...
கலந்துபார்....
தேன் சுரையில் புகுந்துகொண்ட எறும்பாவாய்..
ஆதலினால் நீயும் மெய்யாய்...
காதலாகிக் கசிந்து பார்.....!!!

No comments:

Post a Comment