
அன்று திருமலை நகர் இரண்டுதினங்களில் வரப்போகின்ற புதுவருடத்திற்கான எதிர்பார்ப்புகளோடு சுறுசுறுப்பாய் இருந்தது. மதியம் தாண்டிய வேளை… வெயில் தகித்துக்கொண்டிருக்க வீதிகளில் சனக்கூட்டம் சற்றேகுறைவாய் இருந்தது. எங்களது Dialog GSM Branch Officeஇனுள்ளும் நான்கு ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டுமே.
மதியம் 3.45 மணியிருக்கும் பெரிதாய் ஒரு வெடிப்புச்சத்தம். கட்டடமும் அதிர்ந்தோய்ந்தது. ஓடிச்சென்று வெளியில் பார்த்த நண்பன் ஏதோ Transformerவெடித்திருக்களா
ஆனால் சில நிமிடங்களிலேயே எங்கள் நம்பிக்கைகள் அணைத்தும் பொடியாக்கப்பட்டது. எங்கள்வெளிக்கதவு உடைக்கப்பட்டு உள்கதவு முரட்டுத்தனமாய் இடிக்கப்படுகின்றது, கெட்டவார்த்தைகள் எங்கள் செவிகளை இடிக்கின்றது. உடைக்க முடியவில்லை கொழுத்திவிடுங்கள் என்ற காடையர்களின் குரலில் நாங்கள் சுயமுடைகிறோம். திடீரென நெருப்புப்பிழம்புகளுடன் வெளியே வெடிப்புச்சத்தங்கள் கேட்கின்றது, புரிந்துபோனது எங்களிற்கு, வெளியே நிறுத்திவைத்திருந்த எங்கள் Motor bikeகளுக்கும் நெருப்புவைத்துவிட்டார்கள்.
எங்களிற்கு அடுத்ததாய் இருந்த R.R.Group (Unilever Distributor) இற்க்கு உள்ளிருந்து காடையர்களின் வெறித்தனமான கத்தல் கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் எங்களை கண்டுவிட்டால் அடுத்தநொடி நாங்களும் கருக்கப்பட்டுவிடுவோம் என்ற பயம் எங்கள் மூச்சைக்கூட வெளியேற்ற பயத்தைக்கொடுத்துக்கொண்டிரு
எப்படியாயினும் வெளியேறிவிடவேண்டுமென்ற இறுதிமுடிவோடு கையில்கிடைத்த கல்லு, இரும்பைக்கொண்டு வலையை உடைக்க மாறி மாறி முயறசித்துக்கொண்டிருக்க மேல் நோக்கிய துப்பாக்கிச்சூட்டுச்சத்தங்
இப்போது வன்செயலில் சூறையாடப்பட்ட திருமலை நகரத்தை ஓரளவு காணக்கிடைத்தது. மத்திய வீதியில் Marketதொடக்கம் இராஐவரோதயம் வீதிவரையிருந்த அத்தனை தமிழ் உரிமையாளர்களது கடைகளும் தீயிட்டு கொழுத்தப்பட்டிருந்தது. எங்கும் புகை மண்டலம்…. எங்கும் இராணுவம்…. எங்களிற்கு உதவி கேட்கவும் பயம்…. பொதுமக்கள் யாரும் இல்லா வீதியில் நாங்களும் எதுவும் செய்யப்படலாம் என்ற அச்சம். பதுங்கியபடியே இருக்கின்றோம். நேரம் உருண்டோட ஓரளவு அமைதி நிலவத்தொடங்குகின்றது. உதவிகேட்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்க எங்கள் Officeஇற்கு அடிக்கடி வந்துபோகும் ஒரு Navy Commanderஐ கண்டுகொண்டதும் இதுதான் சந்தர்ப்பம் நடப்பது நடக்கட்டுமென்று அவரை அழைத்து உதவி கேட்க அவரும் எங்களை வெளியே அழைத்து பயப்படவேண்டாம் எனசொல்லி ஒரு இராணுவ சிப்பாயுடன் வித்தியாலயம் வீதிவரை சென்றுவிடுமாறு சொல்ல உயிர்தப்பிய ஆச்சரியத்துடன் கரிபடிந்துபோன உடல்களுடன் மீண்டுகொண்டோம். ஆனாலும் அன்று என்னால் பாதுகாப்பு காரணங்களால் வீடுசெல்ல முடியாதுபோக நண்பனின் வீட்டில் தங்கி மறுநாளே வீடடைந்தேன்.
இது எங்கள் மறுபிறப்பு. அந்த வன்செயலில் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத எத்தனையோ அப்பாவிகளின் உயிர்கள் சூறையாடப்பட்டதும் பெண்கள் நாசமாக்கப்பட்டு கொள்ளப்பட்டதுமான கறைபடிந்துபோன உண்மைதகவல்கள் பல இன்றுவரை வெளிக்கொண்டுவரப்படவில்லை. அந்த பயங்கர இனவெறிஆட்டத்தில் ஒருவேளை நாங்கள் பலியாகிப்போயிருந்தால்கூட இன்றுவரை நடந்துபோன அத்தனை அநியாயப்படுகொலைகளில் ஒன்றாய் ஒரு செய்தியாய்மட்டுமே பதிவாகியிருந்திருக்கும் என்பதே யதார்த்தம்.














