ஞானியாய்....
தூயவனாய்...
வழிகாட்டும் எழியோனாய் ....
மாசறு துறவியாய்....
மார்க்க சீலனாய்....
தர்மபதா அருளிய பெரியோனாய்....
ஞானம் கண்ட மேலோனாய்...
எத்தனை அறிந்தும்....என்ன
உன்னை எவ்வுயறம் தூக்கிவைத்தும் என்ன....
சித்தார்த்தா.....
நான் தெருவிறங்கி... மீள
வீடு வந்து சேர்கையில்...
உன் அத்தனை உயரங்களும் தகர்ந்து....
விம்பங்களும் உடைந்து..... வெறும்...
ஆக்கிரமிப்பின் சின்னமாய் மட்டுமே
மனதில் நீ தங்கிகொள்கிறாய்.......
Ganesh
Monday, August 18, 2014
Monday, January 27, 2014
கனவாடிய பொழுதுகள்
உறுத்தாமல் நீட்சியாகும் கனவு...
இடராமல் தொடருகின்ற ஒற்றையடி பாதை...
பெருந்துளியகாமல் சாரலாய் விசிறுகின்ற மழை மேகம்...
கூதல் தொடராமல் மயிர் கால்களை சீன்டிபோகும் இளம் காற்று...
பயம் தராத தனிமை...
எனக்காய் என் பாதையில் பயணிக்கும் பட்டாம் பூச்சி...
காய்ந்துபோகாத தேனை பொத்தி வைத்து சிரிக்கும் காட்டுப்பூக்கள்...
அலைபேசிக்கான அலை வீச்சில் அகப்படாத காற்று வெளி...
சட்டென்று அனிக்ச்சையாய் ஞாபகத்தில் வந்துநிற்கும் பாரதி கவி வரிகள்...
வண்டு செய்த மூங்கில் மரக் குழல்களின் பின்னணி ரீங்காரம்...
தொடர்கிறது எனது தனிமை பயணம்...
கனவென்றாலும்.... காற்றில் மிதக்கிறது இதயம்..
நன்றி என் தனிமைக்கு...!!!!

Subscribe to:
Posts (Atom)