Pages

Ganesh

Ganesh

Monday, December 3, 2012

அறுபட எத்தெனிப்பவன்......


என் அடர்ந்த மவுனங்களின் வலி
எனக்குள்ளேயே புதையுண்டுபோனது...
கனவுகளும்... கற்பனைகளும்...
என் கவிதைகளுக்குள்ளேயே அடக்கமாயிற்று..
என் உலகமும்... உறவுகளும்...
சிறிய வட்டத்தினுள்ளே சுருங்கிக்கொண்டது...
பேசுவது.... கேட்பது.....
பார்ப்பது..... பழகுவது என
எல்லாமே எல்லை வகுத்துக்கொண்டது...
இந்த பிறவியின்பின்னர் யாதென அறிவில்லை...
மறுஜென்மம்... உண்டென்பதில் தெளிவில்லை...
கண்ணீர் கவலைகளின் மொழியானால்
அம்மொழியும் வற்றிப்போய் ஜடமானேன்...
எந்தகணத்தில் முற்றுப்புள்ளியை
இறுதியாய் பதிவாக்கும் எனது
இந்த வாழ்க்கைப்புத்தகம்....
எதிர்பார்ப்புடன் நான்.....
காதலின்... காதலியின்... பிரிவுடன்
உலகின் தொடர்பு எல்லைகளிலிருந்து
அறுபட எத்தெனிப்பவன்......

இப்படியாவது ஒரு மடல் வரைய ஆசைதான்...
என்ன செய்ய.... காதலியே இல்லை...
இதில் எங்கே காதல் தோல்வி....

என்னது….. ஒரு அசரீதி கேட்குதே...

யாருமில்லாத கடையில யாருக்கடா டீ ஆத்திறான் இவன்

விடுங்கடா.... வாழ்க்கையில இதெல்லாம்
ஜகஜமப்பா......

Wednesday, May 2, 2012

பசிமுகம்


என் பசிமுகம் காணாதே...
மடி தூங்கு...
நம்மை பசி தின்னும்... தின்றாலும்...
நீ தூங்கு...
வயிறு பசிபற்றி எரிகையிலே
கண்ணயறாதென அறிந்தாலும்...
கண்ணே உன் முகம்காணும் திடமற்றேன்...
இந்த அக்கையின் மடிசாய்ந்து
நீ தூங்கு....
வளையல்கள் கேட்கவில்லை...
வண்ண ஆடைகேட்கவில்லை...
பொம்மைகள் தேவையில்லை...
பொய்பரிவும் தேவையில்லை...
தேவையெல்லாம்.. மீட்ச்சி....
இந்த பசிச்சிறை உடைத்தெறிந்து...
தெருவோர வாழ்வினின்று...
குழந்தைகள் நாம் குழந்தைகளாகும்...
மீட்ச்சி தானேநம் தேவையெல்லாம்...
அதுவரைநீ மடிதூங்கு…
என் பசிமுகம் காணாதே...
மடி தூங்கு...
நம்மை பசி தின்னும்... தின்றாலும்...
நீ தூங்கு...