
அழகிய ஹைக்கூ..
என்னவள் இதல்கள் இரண்டும்…!
அவள் புருவ விற்கள்
வளையும் கணமெல்லாம்..
வேடன் இங்கே செத்துக்கொண்டிருக்கிறேன்..!.
கைதியாய் அடைபட நான் தயார்..
உன் இதயம் திருடிய கள்வன்
நான்தானென புகார் கொடு...!
காட்டிகொடுப்பது இங்கே தப்பில்லை…
உன் உறக்கம் கெடுத்தவனும்...
உள்ளக்கதவை உடைத்து நுழைந்தவனும்..
அனுமதியின்றி கணம் உன்னை நினைப்பவனும்..
கனவுகளை களவாடிச்சென்றவனும்..
இவன்தானென என்னை
எல்லோரிடத்திலும் காட்டிகொடுத்துவிடு…!
படைப்பவன் பிரம்மன் என்பது
பொய்யாய்த்தான் இருக்கும்...
உன்னை அவன் படைத்திருந்தால்
பிரிய எப்படி சம்மதித்திருப்பான்.....!
உன்னைப்போல் ஏழுபேர்
சத்தியமாய் உலகிலிருக்க வாய்ப்பில்லை..
அத்தனை அழகை நிச்சயம் தாங்காது
இப்பூமி.....!
அதிசயம் பார்த்தாயா..
உன்னைப்பற்றி உளருவதெல்லாம்
கவிதையென சேமிக்கின்றது
என் இதயப்புத்தகம்....!
இவையெல்லாம் மற்றவர்க்கெப்படியோ.......!!!
இருந்தாலும்……..
எனக்கு.....பொக்கிஷங்கள்....!!!!

No comments:
Post a Comment