தனிமை...
அது ஒரு தவம்...!
அதுவே ஒரு வரம்..!
கவிதைகளின் பிறப்பிடம்...!
கனவுகளின் உறைவிடம்..!
கடந்தகாலத்தை மீள்படிக்க
உதவும் நாற்குறிப்பேடு..!
என்னை நானே உற்றுப்பார்த்திட
வழி செய்யும் கண்ணாடி...!
மெளனத்தின் வழி
பலநூறு கதை சொல்லும் கருவூலம்..!
காதடைக்கும் இரைச்சல்விடுத்து
இதம் சேர்க்கும் தியானபீடம்...!
இது……….
எல்லாம் இருந்தும்…. இளைப்பாற சில பொழுதுகள்
தனிமை சேர்பவன் மனநிலை....!!
தனிமை...
அது ஒரு வலி...!
அதுவே ஒரு சாபம்..!
தவறுகளின் பிறப்பிடம்...!
தண்டனையின் உறைவிடம்..!
பிரிவுத்துயர் சொல்லித்தரும்
கலாசாலை..!
கவலைகளுக்கு தூபமிடும் பலிபீடம்..!
வெறுமையின் வாசிகசாலை..!
பசிப்பவனின் வெற்றுக்கோப்பை..!
வாய் இருந்தும் நாவறுந்ததாய்..
கேள்செவியிருந்தும் செவிடானதாய்...
எண்ணத்தோன்றும் மலட்டுநிலை...!
இது……….
உறவுகள் பிரிந்து
தனிமையின் பிடியில்
கோரமாய் சிக்கிக்கொண்டவன் மனநிலை…!!
இரண்டுமே தனிமைதான்...
இருந்தும்..
இரண்டுமே தனித்தனி...!!!!!
Ganesh
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment