உன் அழகை
கவிதையில் சமைத்து
காதலுடன் சேர்த்தேன்
உன் கரம்...
என்னை அவமதிப்பதாய்..
குப்பையென கசக்கி
வீதியில் வீசினாய் அதை...
அடி மூடப்பெண்ணே….
எழுதியவன் நானெனினும்
அதில் எழுதப்பட்டவள்
நீயன்றோ....!
காயங்களுடன் நான்
வீடு வந்துசேர்ந்துவிட்டேன்..
இன்னும் நீயோ
கசங்கியபடியே வீதியில்கிடக்கின்றாய்...!
ஓடிச்சென்று அதை
பத்திரப்படுத்திக்கொள்ளடி...
பின்னொருநாள் …
உன் பார்வையில்…
உன் வீட்டு
நிலைக்கண்ணாடியைவிடவும்
அது உன்னை
அழகாய் காட்டக்கூடும்....!!!
Ganesh
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment