Pages

Ganesh

Ganesh

Thursday, February 11, 2010

காட்சிப்பிழை


விழித்திரையில் சாதாரண விம்பமாய்
தலைகீழாய்த்தானே நீயும் விழுந்தாய்...
ஆனால் விழுந்த நொடியே.. என்னை
தலைகீழாய் ஏனடி புரட்டிப்போட்டாய்...
நாடி பிடித்துப்பார்த்தேன்
உனக்குமாய் சேர்த்து என் இதயம் துடிக்கிறது...
சற்றே திரும்பிப்பார்த்தேன்
என் பின்னே இரண்டு நிழல்தொடர்கிறது...
என் கடிகார முட்கள் கட்டின்றி
உன்னைநோக்கியே ஓடுகின்றதடி...
என் சுயமும்... சுற்றமும்... உன்னால் இங்கே
தொடர்பறுந்து கிடக்குதடி...
வண்ணத்துப்பூச்சி இறக்கை ஓவியமாய்
வரைந்தவன் தெரியாமலேயே
உன்படம் மனதில் ஒட்டிக்கொண்டது...
விழி தொடும் தொலைவில்
நீ இல்லா பொழுதுகளிலும்.. என்
கைகளில் உன் வெப்பம்
மெதுவாய் மோதிக்கொண்டது...
மெல்லிய காற்று
என் உடல் வருடும்போதெல்லாம்
காரிகை உன் இமைச்சாமரங்கள்… எங்கோ
அழகாய் படபடப்பதாய்
உணர்கிறேன் நான்...
உடலினில் உயிர் இருக்குமிடம்போல
உன்னை எனக்குள்ளே
ஒழித்துக்கொள்ள தவிக்கிறேன் நான்...
இப்படியாய்... இதற்கும்மேலாய்...
வழமை தாண்டிய காட்சிப்பிழைகள் என்னில் ...
உன் வாய்மொழி வார்த்தையில்
பிழத்துக்கொள்ளும் என் ஜீவன் மண்ணில்...

No comments:

Post a Comment